/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தடுப்பணை நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி! Covai | Noyyal | Check Dam
தடுப்பணை நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி! Covai | Noyyal | Check Dam
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த ஆலாந்துறை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பச்சினம்பதி உள்ளது. நொய்யல் நதி உருவாகும் அந்த இடம் ஆண்டு முழுவதும் பசுமையுடன் காணப்படும். மலையிலிருந்து வரும் நீரை தேக்கி வைக்க அங்கு ஊத்துபள்ளம் என்ற இடத்தில் 2004ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. அதை முறையாக பராமரிக்காததால் தடுப்பணை முழுவதும் மண் நிரம்பி நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழை பெய்து நீர்வந்தாலும் அப்படியே ஆற்றில் சென்று விடுவதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். ஆண்டுக்காண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் மக்களும் பாதிக்கப்பட்டனர்.
நவ 16, 2024