நம்பர் 1 நாடாக்க கடுமையாக உழைக்கிறோம்: அமித் ஷா Watan ko Jano | Delhi | Amit Shah | Kashmir
மற்ற மாநிலங்களை போல காஷ்மீரும் மாறிவிட்டது! மத்திய உள்துறை அமைச்சகமும், ஜம்மு- காஷ்மீர் அரசும் இணைந்து உங்கள் தேசத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், ஜம்மு -காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். இந்த நாட்டை உலகில் முதல் இடத்துக்கு கொண்டுவர நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நம் குழந்தைகளை எங்கு படிக்க விருப்பம் என கேட்டால், அமெரிக்கா, கனடா அல்லது ஆஸ்திரேலியா என சொல்வார்கள். 10 ஆண்டுக்கு பிறகு பார்த்தீர்கள் என்றால், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளும் இந்தியாவுக்கு வந்து படிப்பார்கள். அந்த நிலைக்கு இந்தியா உயரும். இந்த நாடு முன்னேறும்போது நீங்களும் முன்னேறுவீர்கள். இந்த தேசம் எவ்வளவு தூரம் வளர்கிறதோ, எந்த அளவுக்கு நவீனம் ஆகிறதோ அதனால் ஏற்படும் அத்தனை பயன்களும் உங்களுக்கு கிடைக்கும். 370வது பிரிவை நீக்கி அவர் முழு நாட்டையும் ஒன்றிணைத்தார். ஜம்மு-காஷ்மீர் இப்போது மற்ற மாநிலங்களை போல மாறிவிட்டது. டில்லியில் உள்ள குழந்தைகளைப் போலவே காஷ்மீர் குழந்தைகளுக்கும் இந்த நாட்டின் மீது அதிக உரிமை உண்டு. காஷ்மீரில் உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதுபோல நாட்டில் உள்ள மற்ற 29 மாநிலங்களிலும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான், உங்கள் தேசத்தை தெரிந்துகொள்ளுங்கள் என்ற இந்த திட்டத்தை உருவாக்கினோம் என அமித்ஷா கூறினார்.