டில்லி சட்டசபை தேர்தல் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் | Delhi assembly election | BJP | Candida
70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி தனது இருப்பை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. அதுவும் லோக்சபா தேர்தலை போல் இல்லாமல், இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் கைதாகி, முதல்வர் பதவியை இழந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் ஆம்ஆத்மி கட்சி, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தையும் துவங்கி விட்டது. கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், முதல்வர் ஆதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரவ் பரத்வாஜ் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜவில் இருந்து விலகி மனைவியுடன் ஆம்ஆத்மியில் சேர்ந்த ரமேஷ் பெல்வான், கஸ்தூர்பா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தலைநகர் டில்லியில் ஆட்சியை கைப்பற்றுவதை கவுரவமாக கருதுகிறது பாஜக. இதனால் தான் டில்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.