உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆம் ஆத்மி, பாஜ வார்த்தை போர் | Arvind Kejriwal's bail | Aam Aadmi | BJP

கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆம் ஆத்மி, பாஜ வார்த்தை போர் | Arvind Kejriwal's bail | Aam Aadmi | BJP

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21ல் அமலாக்கத்துறை கைது செய்தது. திகார் சிறையில் இருந்த அவரை அதே வழக்கில் ஜூன் 26ல் சிபிஐயும் கைது செய்தது. இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு டில்லி கீழமை கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து வந்தார். அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 12ல் ஜாமீன் வழங்கியது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் இருந்தார். அந்த வழக்கிலும் தனக்கு இடைக்கால ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். அதை விசாரித்த கோர்ட் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருகிறார். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மனைவி சுனிதா கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். பாஜவின் திட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துவிட்டு ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள் என்றும் அவர் கூறினார். இறுதியாக உண்மை வென்றதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். இது ஜனநாயகத்தின் வெற்றி. இந்த வழக்கில் எதுவுமே இல்லை. எல்லாம் வெளிவரும் என்றும் குறிப்பிட்டார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ