ராமாயணம் பாணியில் ஆதிஷி விளக்கம்! | Delhi CM Atishi | Kejriwal | Atishi chair
ஆதிஷி பக்கத்தில் காலி நாற்காலி காரணம் என்ன? டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்ததும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். ஊழல்வாதி அல்ல என நிரூபணம் ஆன பிறகு தான் முதல்வர் நாற்காலியில் உட்காருவேன். நான் நேர்மையானவன் என நம்பி மக்கள் ஓட்டளித்தால் மட்டுமே மீண்டும் பதவிக்கு வருவேன் எனவும் சபதம் போட்டார். இதை தொடர்ந்து புதிய முதல்வராக பதவி ஏற்ற அமைச்சர் ஆதிஷி இன்று அலுவலகம் வந்து பணிகளை தொடங்கினார். அப்போது அவர் தனது பக்கத்தில் ஒரு காலி நாற்காலியை வைத்து இருந்தது கவனத்தை ஈர்த்தது. அது முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் நாற்காலி. அதில் உட்காராமல் ஆதிஷி ஏன் புது நாற்காலியை தேர்வு செய்தார் என கேள்விகள் எழுந்துள்ளது. பொறுப்பேற்றதும் பேசிய ஆதிஷி டில்லியின் முதல்வர் எப்போதும் கெஜ்ரிவால் தான். எனக்கு குருவே அவர் தான் என அன்பு மழையை பொழிந்தார். தொடர்ந்து அந்த காலி நாற்காலிக்கான விளக்கத்தையும் கொடுத்தார். அன்று ராமர் வனவாசம் சென்ற போது பரதன் எந்த சுமையை சுமந்தாரோ இன்று நானும் அதே சுமையை சுமக்கிறேன். ராமரின் செருப்பை அவர் அரியணையில் வைத்து ஆட்சி செய்ததை போல நானும் அடுத்த 4 மாதங்களுக்கு ஆட்சி செய்வேன்.