மோடியின் நல்லாட்சிக்கு டில்லி மக்கள் அங்கீகாரம்: பர்வேஷ் வர்மா Delhi Election 2025 | SIT Probe | BJP
டில்லியில் கடந்த 5ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுபதிவு நடந்தது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. 45 இடங்களுக்கும் மேல் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, 22 இடங்களை பிடித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. புதுடில்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பர்வேஷ் வர்மா 4,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி அமைச்சர்கள் பலரும் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான ஆம் ஆத்மி ஆட்சியில், டில்லியில் பல துறைகளிலும் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாஜ தலைமையில் அமையும் புதிய அரசில் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என பர்வேஷ் கூறினார்.