/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டில்லியில் மதராசி கேம்ப் பகுதிகள் இடித்து அகற்றம் | Delhi Madrasi Camp | Jangpura | Delhi HC order
டில்லியில் மதராசி கேம்ப் பகுதிகள் இடித்து அகற்றம் | Delhi Madrasi Camp | Jangpura | Delhi HC order
டில்லி ஜங்புரா பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை, தலைமுறையாக வசிக்கும் தமிழர்களின் குடிசை பகுதிதான் மதராசி முகாம். பாராபுல்லா பாலத்திற்கு அருகே இந்த மதராசி முகாம் அமைந்து இருந்தது. இந்த சூழலில் பாராபுல்லா கால்வாயில் அடைப்பு ஏற்படுவதாகவும், மழை காலங்களில் கழிவு நீர் முறையாக செல்லவில்லை என்றும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் பாராபுல்லா கால்வாயை புனரமைத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கால்வாயை ஒட்டி உள்ள குடிசை பகுதிகளை அகற்றுவது தொடர்பாக ஒரு வாரம் கெடு வழங்கப்பட்டது.
ஜூன் 01, 2025