வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றாததால் அதிருப்தி delhi minister| kailash gehlot resign| kejriwal| A
AAPல் இருந்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது! டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா டெல்லி அரசின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இருக்கும் மூத்த உறுப்பினர் அவர். முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு கைலாஷ் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கட்சி நிறைவேற்றாதது; சமீப காலமாக கட்சி சந்தித்து வரும் சர்சைகளுமே பதவி விலகுவதற்கு காரணமாக சொல்லி இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி பல சவால்களை சந்தித்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. உதாரணமாக, யமுனை நதியை சுத்தமான நதியாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால், அதை செய்ய முடியாவில்லை. இப்போது யமுனை நதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு அடைந்துள்ளதாக கைலாஷ் சுட்டிக்காட்டி உள்ளார். முதல்வராக இருந்தபோது கெஜ்ரிவால் தங்கியிருந்த ஷீஷ் மஹால் வீட்டில் பல கோடிகள் செலவில் செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது சர்ச்சையானது. இது பற்றியும் கைலாஷ் சொல்லியிருக்கிறார்.