டெல்லி நகரமே டோட்டல் குளோஸ்; கெஜ்ரிவால் மீது அமித்ஷா பாய்ச்சல் | Amit Shah | Kejriwal | Delhi
டெல்லி சட்டசபைக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நடைபெற்ற பாஜ பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்துகிறது. டெல்லியை கெஜ்ரிவால் குப்பை கிடங்காக மாற்றிவிட்டார். யமுனையை மாசுப்படுத்திவிட்டார். நகரின் உள்கட்டமைப்பு சிதைந்துவிட்டது. ஊழலுக்கு எதிராக போராடுவதாக கெஜ்ரிவால் கூறினார். மதுக்கடைகளை மூடுவேன் என்றார். ஆனால், பள்ளிகள், கோயில்கள் அருகிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கொள்ளை ஊழலில் 1200 கோடி ரூபாய், குடிநீர் வாரிய ஊழலில் 28,400 கோடி, வகுப்பறை ஊழலில் 1300 என ஊழலையை அவர்கள் தத்தெடுத்து கொண்டுள்ளனர். டெல்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. யமுனை நதி முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளது. அசுத்தமான தண்ணீரை மக்கள் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் உலகின் முதல் தலைநகராக டெல்லி மாறும் என்று அமித்ஷா கூறினார்.