250 டன் ஏசி வசதி; வாயை பிளக்கும் டில்லி மக்கள் | Delhi CM house | Bjp | AAP | Sheesh Mahal
கெஜ்ரிவால் பங்களாவில் பிரமிக்க வைக்கும் வசதிகள் திரைச்சீலை ரூ.6 கோடியாம் OLED TV முதல் Smart Toilet வரை டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த மாதம் அவர் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் இருக்கும் காலத்தில் தலைமைச் செயலகத்துக்கோ முதல்வர் அலுவலகத்துக்கோ செல்லக்கூடாது. அரசு பைல்களில் கையெழுத்து போடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் போட்ட நிபந்தனைகள் காரணமாக முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து டில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்தார். தன்னை மிகவும் எளிமையானவன்போல மக்கள் மத்தியில் கெஜ்ரிவால் காட்டிக் கொள்கிறார். ஆனால் முதல்வரின் பங்களாவில் மக்கள் பணம் 45 கோடி ரூபாயை செலவழித்து பல ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளன என டில்லி பா.ஜ தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.