உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டின் வளர்ச்சியும் முக்கியம் பாரம்பரியமும் முக்கியம் development-in-every-sector-with-vision-of-

நாட்டின் வளர்ச்சியும் முக்கியம் பாரம்பரியமும் முக்கியம் development-in-every-sector-with-vision-of-

2014ல் உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. இது பல அரசுகள் 60 ஆண்டுகளாக எடுத்த முயற்சிகளால் நடந்தது. ஆனால், இந்தியாவை 5வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நாம் பத்து ஆண்டுகள் மட்டுமே எடுத்துக்கொண்டோம். இந்த கால கட்டத்தில் நாட்டின் ஏற்றுமதியும் உள்கட்டமைப்பு வசதிகளும் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. மிகப்பெரிய மக்கள் தொகை இருந்தாலும், டிஜிட்டல் மயமாக்கலில் நமது நாடு மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் நம் நாடு முன்னிலையில் உள்ளது. வளர்ச்சியும், பாரம்பரியமும் ராஜஸ்தானின் தாரக மந்திரம். எந்த சவாலையும் எதிர்கொள்வதுதான் ராஜஸ்தான் அரசின் குணம். ராஜஸ்தானில் நடக்கும் பாரதிய ஜனதா அரசு இன்னும் ஒரு சில தினங்களில் ஓராண்டை நிறைவு செய்ய உள்ளது. புதிய முதல்வர் பஜன்லால் சர்மாவின் திறமை மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என என்னால் உறுதியாக கூற முடியும். துத்தநாகம், ஈயம், தாமிரம், பளிங்கு, சுண்ணாம்பு மற்றும் கிரானைட் போன்ற கனிம வளம் ராஜஸ்தானில்தான் அதிகமாக கொட்டிக்கிடக்கிறது. தன்னிறைவு பெற்ற இந்தியாவின் அடித்தளமாக கனிம வளங்கள் உள்ளன. 2030 க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திறனை உருவாக்க நம் நாடு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதில் ராஜஸ்தான் பங்கு மிகவும் முக்கியமானது. இங்குதான் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி கூறினார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ