அகிலேஷ் பேச காதல் மனைவி டிம்பிள் உருகும் காட்சி | Dimple yadav reaction in LS | Akhilesh | Dimple
புதன்கிழமை நடந்த சபாநாயகர் தேர்தல்ல அபார வெற்றி பெற்ற பாஜ வேட்பாளர் ஓம் பிர்லா, தொடர்ந்து 2வது முறையா சபாநாயகர் பதவிய ஏற்றாரு. சபையில் நடந்த அடுத்த நிகழ்ச்சில கட்சிகள் சார்புல அவருக்கு பாராட்டு தெரிவிச்சாங்க. அந்த வரிசையில, சமாஜ்வாடி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் 2 நிமிஷம் சபாநாயகர வாழ்த்தி பேசுனாரு. அந்த ரெண்டு நிமிஷத்துல க்ளீயராகவும், கிண்டலாகவும் தான் சொல்ல வந்தத நச்சுனு போட்டு உடைச்சாரு அகிலேஷ். அவர் பேசிட்டு இருக்கும் போது, அதே சபையில அவரோட மனைவியும் எம்பியுமான டிம்பிள் யாதவும் இருந்தாங்க. அகிலேசுக்கு கொஞ்சம் பின் வரிசையில இருந்த டிம்பிள், தன்னோட கணவர் பேச்ச ரொம்பவே ரசிச்சு கேட்டாங்க. அப்பப்ப அகிலேஷ பார்த்து கனிவும், காதலும் கலந்த க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்தாங்க. டிம்பிள் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ இப்ப வெளியாகி வேற லெவல்ல வைரல் ஆகிட்டு இருக்கு.