வளர்ச்சி பணிகள் தொடங்காததால் வட சென்னை மக்கள் அதிருப்தி | North chennai | ₹1200 crore project
வட சென்னையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதற்காக, 2023 - 24 பட்ஜெட்டில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான நிதியை சி.எம்.டி.ஏ வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதன்படி எந்த பகுதிக்கு என்ன மாதிரியான திட்டம் தேவை என்பது குறித்து சிஎம்டிஏ மக்களிடமே கருத்து கேட்டது. அப்படி பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், கள நிலையில் ஆய்வுகள் நடந்தன. பொதுப்பணி, நீர் வளம், மாநகராட்சி, கல்வி, சுகாதாரம், நெடுஞ்சாலை என பல துறைகளின் கருத்துகளும் கேட்கப்பட்டன. 11 துறைகள் சார்பில் அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், வார்டு வாரியாக தேவைப்படும் திட்டங்களின் பட்டியல் தயாரானது.