/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விழுப்புரத்தில் முதல் முறை நடந்த தினமலர் மெகா கோலப்போட்டி | Dinamalar Mega Kolappotti | Villupuram
விழுப்புரத்தில் முதல் முறை நடந்த தினமலர் மெகா கோலப்போட்டி | Dinamalar Mega Kolappotti | Villupuram
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் தினமலர் நாளிதழ், மெகா கோலப்போட்டியை நடத்தி வருகிறது. இந்தாண்டு முதல் முறையாக விழுப்புரத்திலும் நடத்தியது. தினமலர் நாளிதழ், விழுப்புரம் ஸ்ரீ மஹாலஷ்மி குரூப்ஸ், சூப்பர் ருசி பால் நிறுவனத்துடன் இணைந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மெகா கோலப்போட்டி நடந்தது. புள்ளி கோலம், ரங்கோலி, டிசைன் கோலம் என 3 பிரிவுகளில் 500 பேருக்கு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முன்பதிவு செய்த பெண்கள் அதிகாலை 4 மணி முதலே குடும்பத்துடன் திரண்டனர்.
ஜன 05, 2025