உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2 விஷயங்கள் கேட்டு மூத்த அமைச்சருடன் டீல்! | DMDK | DMK | ADMK | Premalatha

2 விஷயங்கள் கேட்டு மூத்த அமைச்சருடன் டீல்! | DMDK | DMK | ADMK | Premalatha

தேமுதிக இப்போது வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும் அக்கட்சிக்கு எம்எல்ஏ, எம்பிக்கள் இல்லை. அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது. அதிமுகவிடம் பெரிதும் எதிர்பார்த்த ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைக்காது என தெரிய வந்தது. தன் மகனின் எதிர்காலம் கருதி இப்போது திமுக பக்கம் திரும்பி உள்ளார் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா. திமுக கூட்டணியில் சேர காய் நகர்த்தி வரும் அவர், சமீப நாட்களாக தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகிறார். லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று அரசின் முடிவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்தது. தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்பதாகவும் பிரேமலதா கூறினார். பிரேமலதாவின் மன மாற்றத்திற்கு திமுகவில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சு தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்து தேமுதிக வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், தேமுதிகவுக்கு சட்டசபையிலும், லோக்சபாவிலும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். அதிமுகவிடம் போய் அனைத்தும் இழந்து விட்டோம் என பிரேமலதா எண்ணுகிறார். மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதற்கு பதிலாக தேமுதிகவுக்கு வழங்கினால் நாயுடு சமுதாயத்தினரின் ஓட்டுகளை தக்க வைக்கும் வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தேமுதிகவுக்கு சீட் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என அந்த வட்டாரங்கள் கூறின.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை