உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின்-பிரேமலதா சந்திப்பில் நடந்த அந்த பேச்சுவார்த்தை dmdk| dmk| premalatha| mk stalin| dmk

ஸ்டாலின்-பிரேமலதா சந்திப்பில் நடந்த அந்த பேச்சுவார்த்தை dmdk| dmk| premalatha| mk stalin| dmk

தமிழக சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற திமுக தலைமை இலக்கு வைத்துள்ளது. அதே நேரம் அதிமுக-பாஜ கூட்டணி வலுப்பெற்றால் திமுகவின் வெற்றி இலக்கு குறையக்கூடும். இதை தடுக்க கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகளை இழுக்க திமுக நினைக்கிறது. அதற்காக தேமுதிகவுடன் பேச்சு நடக்கிறது. சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர் ஸ்டாலினை, அவரது வீட்டுக்கே சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே; அரசியல் பேசவில்லை என பிரேமலதா கூறியிருந்தார். ஆனால், இந்த சந்திப்பின்போது கூட்டணி பேச்சும் நடந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிகவுக்கு 9 சீட்கள் வழங்க ஸ்டாலின் முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 15 சீட் கேட்ட பிரேமலதா, பின்னர் 12க்கு இறங்கி வந்துள்ளார். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் அவ்வளவு ஒதுக்க இயலாது. உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவிகளுக்கு சீட் தருவதாக முதல்வர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 12 சீட்டில் பிரேமலதா பிடிவாதமாக இருந்ததால் அடுத்த சந்திப்பில் பேசலாம் என கூறி ஸ்டாலின் அனுப்பி இருக்கிறார் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !