திமுக கூட்டணியில் தொகுதிகளை குறைத்தால் பதவி விலகுவோம் | DMDk | DMKAlliance | DMDK vs DMK | SeatShare
திமுக கூட்டணியில் 10 சீட்களுக்கு குறைவாக பெற்றால், பதவி விலகுவோம் என தேமுதிக மாவட்டச்செயலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். திமுக கூட்டணியில், சமீபத்தில் தேமுதிக இணைந்தது. அக்கட்சிக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. ஆனால், எத்தனை சட்டசபை தொகுதிகள் தரப்படும் என்பது, திமுகவால் உறுதி செய்யப்படவில்லை. அக்கட்சிக்கு, 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் 10 தொகுதிகள் வரை பெறாவிட்டால், பதவி விலகப் போவதாக, சில மாவட்டச்செயலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தேமுதிக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: அதிமுக கூட்டணியில், 2011ம் ஆண்டு 41 தொகுதிகளில், தேமுதிக போட்டியிட்டது. மக்கள் நலக் கூட்டணி மற்றும் அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் 100 தொகுதிகளுக்கு மேல் தேமுதிக போட்டியிட்டது. #dmdk #dmk #vijayakanth #premalatha #premalathavijyakanth #dmkalliance #seatsharing #election2026 #tnelection #tnassemblyelection