உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போட்டியிட விரும்பும் தொகுதிகள் விவரத்தை திமுகவிடம் அளித்த கூட்டணி கட்சிகள் | DMK | Alliance Parties

போட்டியிட விரும்பும் தொகுதிகள் விவரத்தை திமுகவிடம் அளித்த கூட்டணி கட்சிகள் | DMK | Alliance Parties

திமுக கூட்டணியில், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகளுக்கு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில், ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்ட கட்சிகள், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை என்பது குறித்த விருப்ப பட்டியலை, திமுக தலைமையிடம் நேற்று வழங்கின. அதன் விபரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், 10 தொகுதிகள் பட்டியலை அக்கட்சி அளித்துள்ளது. தளி, திருத்துறைப்பூண்டி, நாகை, வால்பாறை, தொண்டாமுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், திருப்பூர், பவானிசாகர், பழனி, சிவகங்கை ஆகியவற்றில் இருந்து ஐந்து தொகுதிகளை ஒதுக்குமாறு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன் கேட்டுள்ளார். #dmk #mdmk #congress #dmdk #mnm #kamalhassan #vaiko #duraivaiko #selvaperunthagai #girishshodankar #tvk #communistparties #dmkalliance #election2026

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !