'திருட்டையும், திமுகவையும்...' அண்ணாமலை கமென்ட் | Dmk | Mk Stalin | Annamalai Bjp
நகராட்சி தலைவியின் வளையலை நைசாக உருவும் திமுக கவுன்சிலர்! உறுதிமொழியை காமெடி ஆக்கிய சம்பவம் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக நிர்வாகிகள், நகராட்சி திமுக கவுன்சிலர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். அனைவரும் கைகளை நீட்டி உறுதி எடுத்து கொண்டு இருந்தபோது, திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன், தமது அருகில் நின்று கொண்டிருந்த குன்னூர் நகரட்சி தலைவர் சுசீலா அணிந்திருந்த வளையலை நைசாக உருவ முயன்றார். இதை கவனித்த மற்றொரு கவுன்சிலர் காவேரி, ஜாகிரின் கையை சிரித்தபடி தட்டி விட்டார். இந்த வீடியோவை பகிர்ந்து கமென்ட் செய்துள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலை திருடுகிறார் திமுக கவுன்சிலர். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது என பதிவிட்டுள்ளார்.