திமுக கவுன்சிலருக்கு குத்துவிட்டவர்கள் மீது வழக்கு | DMK | Nelliyalam
ஆபீஸ் வாசலில் திமுக கவுன்சிலர் அலறல் கான்ட்ராக்டர், தலைவருக்கு பஞ்சாயத்து? நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சிவகாமி உள்ளார். இவருக்கும் அரசு கான்ட்ராக்டர் ராயின் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. சிவகாமி என்னிடம் 2 லட்சம் வாங்கி உள்ளார். இன்னும் 18 லட்சம் லஞ்சம் கேட்கிறார் என கான்ட்ராக்டர் ராயின் குற்றம் சாட்டினார். ராயின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த சிவகாமி தரப்பினர் நகராட்சி பணிகளை கான்ட்ராக்டர் முறையாக செய்யவில்லை. இது குறித்து எச்சரிக்கப்பட்டதால் வீண் பழி சுமத்துகிறார் என கூறினர். இதையடுத்து நெல்லியாளம் நகராட்சியில் கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கான்ட்ராக்டர் ராயினுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்து கவுன்சிலர்கள் வெளியே வந்தனர். திமுக கவுன்சிலர் ஆலன் அலுவலகம் முன்பு போனில் பேசிக்கொண்டிருந்தார்.