உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி கட்சிகள் முடிவால் திமுகவுக்கு நெருக்கடி | DMK | R N Ravi Governor

கூட்டணி கட்சிகள் முடிவால் திமுகவுக்கு நெருக்கடி | DMK | R N Ravi Governor

கவர்னரை பகைச்சா என்னாவது? கையை பிசைந்து நிற்கும் திமுக! ஒவ்வோரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது விடுதலை போராட்ட வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தமிழக கவர்னர் ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் விழாவை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கையில், கவர்னர் பதவி காலம் முடிந்தும் அந்த பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன், கூட்டாட்சியை அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்டவர் ரவி. கவர்னர் பதவியில் நீடித்திருப்பதே இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கவர்னரின் தமிழக விரோத தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை