திமுக 'ராசி கடிதம்' கசிந்ததால் பரபரப்பு | DMK letter to lok sabha speaker leaked | DMK fake ideology
பகுத்தறிவு ஊருக்கு தான் சாரே...! எங்களுக்கு ராசி தான் முக்கியம் டில்லியில் திமுக அட்ராசிட்டி திராவிட மாடலை பின்பற்றுகிறோம் என தமிழக அரசு கூறினாலும், பதவியேற்பு விழா உட்பல பல அரசு நிகழ்ச்சிகள் எதுவுமே ராகு காலத்தில் நடப்பதில்லை; நல்ல முகூர்த்த நேரத்தில் தான் நடக்கின்றன. தொண்டர்களிடம் பகுத்தறிவு பேசும் திமுக எதையும் ராசி பார்க்காமல் செய்வதே இல்லை; இதற்கு சாட்சியாக டில்லியிலும் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறதாம் திமுக. அதாவது, பார்லிமென்ட் கட்டடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அலுவலக பணிகளுக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய பார்லிமென்ட் கட்டடம் திறந்த பின், அரசியல் கட்சிகளின் பார்லிமென்ட் அலுவலகங்கள் புதிய கட்டடத்துக்கு மாற வேண்டும். ஆனால் திமுகவோ பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள அலுவலகத்திலேயே செயல்பட விரும்புகிறதாம். இது தொடர்பாக, சபாநாயகருக்கு திமுக கடிதம் எழுதி உள்ளதாக சொல்லப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் திமுக அலுவலகம் உள்ளது. மிகவும் ராசியான இடம். கட்சி பல ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது. புதிய கட்டடம் வேண்டாம். இந்த பழைய இடமே போதும் என்கிறதாம் தி.மு.க., இதையடுத்து, மாநில கட்சிகள் பழைய பார்லிமென்டிலேயே தங்கள் அலுவலகங்களை தொடர்ந்து வைத்திருக்கலாம் என சொல்லி விட்டாரம், சபாநாயகர் ஓம் பிர்லா.