உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் சாட்டையை சுழட்டியதன் பின்னணி இதுதான் | Mayors resign | Coimbatore | Tirunelveli | CM Stalin

முதல்வர் சாட்டையை சுழட்டியதன் பின்னணி இதுதான் | Mayors resign | Coimbatore | Tirunelveli | CM Stalin

கோவை மேயர் கல்பனாவும், திருநெல்வேலி மேயர் சரவணனும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். உடல் நலம், குடும்ப சூழலை காரணமாக கூறியுள்ள இருவரின் ராஜினமாவை, மாநகராட்சி கமிஷனர்களும் உறுதி செய்தனர். இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது, கோவை மாநகராட்சிக்கு முதல் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டவர் கல்பனா. அரசியல் அனுபவம் இல்லாத அவர், கோவை பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, அவரது செல்வாக்கில் மேயரானார். மாமன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கல்பனா தடுமாறினார். மாநகராட்சி டெண்டர்களுக்கு, 3 சதவீதம் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்தது. அமைச்சர்கள் நேரு, முத்துசாமி பஞ்சாயத்து செய்து பிரச்னையை முடித்தனர்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை