உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செந்தில் சிபாரிசுக்கு ஓகே சொன்ன தலைமை; பலர் அதிருப்தி | DMK | Senthil Balaji | Mayor Cadidate

செந்தில் சிபாரிசுக்கு ஓகே சொன்ன தலைமை; பலர் அதிருப்தி | DMK | Senthil Balaji | Mayor Cadidate

கோவை மேயர் வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆபரேஷன் சக்சஸ் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த திமுகவை சேர்ந்த 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 73 பேர் திமுக கவுன்சிலர்கள். இவர்களில் 33 பேர் பெண்கள். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் 33 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பதவியை கைப்பற்ற சீனியர் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்தனர். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளரான 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியின் பெயர் எம்பி ராஜ்குமார் மூலமாக பரிந்துரைக்கப்பட்டது. நேற்று நடந்த மேயர் வேட்பாளரை அறிவிக்கும் கூட்டத்தில் முன்னாள் மேயர் கல்பனா உட்பட சில கவுன்சிலர்கள் வரவில்லை. மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். ரங்கநாயகி 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரது கணவர் ராமச்சந்திரன், 29வது வார்டு திமுக வட்ட செயலர்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை