அமைச்சர்கள் தென்னரசு, ராமச்சந்திரனுக்கு நிம்மதி | Ministers | KKSSR Ramachandran| Thangam Thenarasu
மூணு நாளுக்கு முன்னால 2 மந்திரிகளுக்கு நிம்மதி சுப்ரீம் கோர்ட் தடை தமிழக வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 44.56 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல், மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 முதல் -2011 வரையில் பள்ளி கல்வி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்தது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான ஆதாரம் இல்லை என சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.