உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக அமைச்சர் ஆசியுடன் ரூ.500 கோடி ஊழல்-அதிர்ச்சி | Anbumani | DMK Scam | Rs.500 crore corruption

திமுக அமைச்சர் ஆசியுடன் ரூ.500 கோடி ஊழல்-அதிர்ச்சி | Anbumani | DMK Scam | Rs.500 crore corruption

தமிழக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அதிர்ச்சி கிளப்பி உள்ளார். அவரது அறிக்கை: தமிழக அரசின் வேளாண் விற்பனைத் துறையில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள், அதன் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் விளைபொருட்களை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து, அவர்களுக்கு அதிக விலை பெற்றுத் தருவது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பணி. இதற்காக வணிகர்களிடம் இருந்து, அவர்கள் வாங்கும் பொருட்களின் மொத்த மதிப்பில், ஒரு சதவீதம் சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையில் தான் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. வணிகர்களுடன் ஊழல் கூட்டணி அமைத்து, விவசாயிகளுக்கு குறைவான கொள்முதல் விலையை பெற்றுத் தருகின்றனர். #CorruptionExposed #Anbumani #PMKLeader #Rs500CroreScandal #RegulatedSalesOutlets #PoliticalAccountability #IndiaCorruption #TransparencyInGovernment #FightCorruption #PublicAwareness

மார் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ