/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கப்படவில்லை? | DMK vs AIADMK Health Infrastructure
ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கப்படவில்லை? | DMK vs AIADMK Health Infrastructure
மருத்துவ கல்லுாரிகளை துவங்க, மாநில அரசு வாயிலாக எவ்வித முன்மொழிவும் வைக்காமல், வாய்மொழியாக கேட்டால் கிடைக்காது. அதை பரிசீலித்து அதில் கூடுதல் விபரங்கள் அல்லது விளக்கம் இருந்தால், மாநில அரசிடம் மத்திய அரசு கேட்கும். இவை அனைத்தும் ஆவணங்கள் வாயிலான பணி. இந்த ஐந்தாண்டுகளில் எத்தனை முறை இதுபோன்று கேட்கப்பட்டதற்கான முன்மொழிவு ஆவணங்கள் அரசிடம் உள்ளன என்பதை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எவ்வித ஆவணங்களும் இன்றி, வாய்மொழியாக சென்று கேட்டால் எதுவும் நடக்காது. மத்திய அரசை சண்டைக்கோழி போல் நடத்தினால், மாநில அரசுக்கான திட்டங்களை எப்படி பெற முடியும்?
மார் 27, 2026