உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராஜ கண்ணப்பனை கட்டம் கட்டிய திமுக Manickam Tagore vs Raja Kannappan | DMK vs Cong issue tn election

ராஜ கண்ணப்பனை கட்டம் கட்டிய திமுக Manickam Tagore vs Raja Kannappan | DMK vs Cong issue tn election

திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல ஊர்களில் பங்கேற்று வருகிறார். நேற்று திருநெல்வேலி தச்சநல்லூர் நடக்க பொதுக்கூட்டத்துக்கு வருகை தர இருந்தார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தது. மதியமே திருநெல்வேலி வந்த அமைச்சர், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். அடுத்து பொதுக்கூட்டத்துக்கு புறப்பட இருந்தார். அதற்குள் என்ன நடந்ததோ, அவசரமாக மதுரை திரும்ப வேண்டி இருக்கிறது; தச்சநல்லுார் மற்றும் வீரவநல்லுார் பொதுக் கூட்டங்களை ரத்து செய்து விடுங்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் சொல்லி விட்டு உடனே கிளம்பி விட்டார். இன்று மதுரையில் நடக்கும் தென் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் தான் கடைசி நேரத்தில் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சமீப காலமாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்ற கூட்டங்களில், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருவதாக திமுகவினர் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. #ManickamTagore #RajaKannappan #DMKvsCong #TNElections #TamilNaduPolitics #ElectionDebate #PoliticalConflict #TamilNaduElection2023 #ElectionAnalysis #DMK #Congress #IndiaPolitics #TamilNadu #PoliticalDiscourse #ElectionControversy #ElectionIssues #VoteSmart #PoliticalCampaign #CivicEngagement #BallotBattle

பிப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை