/ தினமலர் டிவி
/ அரசியல்
/ TVK பெண்கள் மேல் கைவைத்து திமுகவினர் அட்டூழியம் | DMK vs TVK Clash | Kumbakonam issue | viral video
TVK பெண்கள் மேல் கைவைத்து திமுகவினர் அட்டூழியம் | DMK vs TVK Clash | Kumbakonam issue | viral video
கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவில் திமுகவினர் ஓட்டு சேகரித்து வந்தனர். அதே பகுதியில் தவெகவினரும் ஓட்டு கேட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு 8000 ரூபாய்க்கான மாதிரி டோக்கனை திமுகவினர் வழங்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தவெகவினர் தட்டி கேட்டனர். அப்போது திமுக, தவெகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதுவும் முற்றி பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி அடித்தனர். இதில் சிலர் சட்டை கிழிந்தது. தவெக மாநகர் செயலாளர் முருகானந்தம் உட்பட இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
ஏப் 14, 2026