/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மார்க்சிஸ்ட் - திமுக முட்டல் மோதல் ஆரம்பம்? CPM | DMK | Su.Venkatesan | Minister Moorty
மார்க்சிஸ்ட் - திமுக முட்டல் மோதல் ஆரம்பம்? CPM | DMK | Su.Venkatesan | Minister Moorty
மதுரை லோக்சபா எம்பி வெங்கடேசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த இவர் தொடர்ந்து 2வது முறையாக மதுரையில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதுரை வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்பிக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளன கண்டா வர சொல்லுங்க! மதுரை தொகுதியில் இரண்டு முறை எம்பி யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத திரு சு.வெங்கடேசன் அவர்களே! உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, இதுவரை நீங்கள் செய்தது என்ன? இப்படிக்கு வண்டியூர் கிராம பொதுமக்கள் என அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அக் 17, 2024