சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்
1996 - 2001 திமுக ஆட்சியில், மருங்காபுரி கால்நடை அமைச்சராக இருந்தவர் செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்கு பின், அதிமுகவில் சேர்ந்தார். திமுக அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, 81 லட்சத்து, 42,977 ரூபாய் சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் போதே, செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்டனர்.
ஆக 17, 2026