2ஜி ரெய்டு பற்றி ஆ ராசா போனில் பேசுவது என்ன? DMKFiles3 | 2G Case | A Raja | KCP| Jaffar Sait
தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு ஏப்ரலில் DMK files பாகம் 1 வெளியிட்டார். அதில் திமுக முக்கிய தலைவர்களின் சொத்து பட்டியல் இருந்தது. ஜூலையில் பாகம் 2 வெளியானது. அரசு துறை கான்ட்ராக்ட்களில் நடந்த முறைகேடுகள் இடம்பெற்று இருந்தது. டிஎம்கே பைல்ஸ் பாகம் 3 கடந்த மாதம் வெளியிட்டார். 2ஜி விசாரணையில் சிபிஐ ரெய்டுகளின் நேரத்தை திமுக, காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டதாக அதில் கூறியிருந்தார். அது தொடர்பாக, முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட் உடன், டிஆர் பாலு, ஆ ராசா ஆகியோர் போனில் பேசும் உரையாடலின் 3 ஆடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டார். தற்போது, 4 ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அதில் திமுக எம்பி ஆ ராசா, முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட் பேசும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.