உயிரை கொடுத்து உழைப்பேன்: ட்ரம்ப் உறுதி | Donald Trump | US election |
கடவுள் என் உயிரை காப்பாற்றியது இதுக்குதான்! ட்ரம்ப் உருக்கம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஜெயித்தபின், புளோரிடா மாகாணத்தில், தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். தம்மை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இனி பொற்கால ஆட்சியாக இருக்க போகிறது என்றார். தேர்தல் பிரசாரத்தின்போது தம்மை சுட்டுக்கொல்ல முயன்ற முயற்சியை ட்ரம்ப் அப்போது நினைவு கூர்ந்தார். ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் கடவுள் என் உயிரை காப்பாற்றி இருக்கிறார் என்று பலரும் என்னிடம் சொன்னார்கள். அந்த காரணம், அமெரிக்காவை காப்பாற்ற வேண்டும்; மீண்டும் சிறந்ததாக மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான். இப்போது நாம் ஒன்றாக சேர்ந்து அந்த நோக்கத்தை நிறைவேற்ற போகிறோம். நம் முன்னால் இருக்கும் பணி எளிதானது அல்ல.