உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தாய்லாந்திலிருந்து போதை கடத்தி வந்த நபர் கைது Drug traffic from Thailand to Chennai| One arrest in

தாய்லாந்திலிருந்து போதை கடத்தி வந்த நபர் கைது Drug traffic from Thailand to Chennai| One arrest in

இரு தினங்களுக்கு முன் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட வடமாநில இளம் பெண் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ஏர்போர்ட் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை பரிசோதித்தபோது, 7 பார்சல்கள் இருந்தன. அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை. கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு மூன்றரை கோடி ரூபாய்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை