உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / துரைமுருகன் மீது அதிருப்தி ஏன்? திமுகவில் நடப்பது என்ன! | Durai Murugan | DMK | MK Stalin CM

துரைமுருகன் மீது அதிருப்தி ஏன்? திமுகவில் நடப்பது என்ன! | Durai Murugan | DMK | MK Stalin CM

தொடர் புறக்கணிப்பில் துரைமுருகன்! பொதுச்செயலர் பதவியும் பறிபோகிறது? கருணாநிதி மறைவுக்கு பின், கட்சிக்கு தலைமையேற்ற ஸ்டாலின், சீனியர் என்ற முறையில் அமைச்சர் துரைமுருகனை பொதுச்செயலர் ஆக்கினார். கருணாநிதி காலத்து மரபை மீறாமல் பொதுக்குழு, செயற்குழு அறிவிப்புகளும், நிர்வாகிகள் நீக்கம், நியமனம் உள்ளிட்ட தகவல்களும், துரைமுருகன் பெயரில் தான் வெளியாகின்றன. ஆனால் கருணாநிதி காலத்தில் அப்போதைய பொதுச்செயலர் அன்பழகனோடு இருந்ததை போன்ற இணக்கமான சூழல், இப்போது இல்லை. ஸ்டாலின் தன் மகன் உதயநிதியிடம் மட்டுமே ஆலோசித்து எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். சில நேரங்களில் பொருளாளர், முதன்மைச் செயலர், மூத்த அமைச்சரிடம் கலந்து பேசப்படுகிறது. மற்ற யாருக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. துரைமுருகன் மீது தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிருப்தியில் இருக்கின்றனர். மணல் குவாரிகளை நிர்வகிக்கும் கனிமவளத் துறைக்கு துரைமுருகனை அமைச்சராக்கிய ஸ்டாலின், துறையை பிரச்னையில்லாமல் கொண்டு செல்ல கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அத்துறையில் ஏகப்பட்ட பிரச்னைகள் அணிவகுத்தன. தன் எதிர்பார்ப்புக்கு மாறாக துரைமுருகன் செயல்படுகிறார்; சீனியரான அவரை, பொறுப்பில் இருந்து எப்படி நீக்குவது என தெரியவில்லை என்று கட்சியின் மற்ற சீனியர்களிடம் புலம்பி உள்ளார் ஸ்டாலின். தொடர்ந்து சர்ச்சைகள் வரவே வேறு வழியின்றி கனிமவளத் துறை சட்ட அமைச்சர் ரகுபதியிடம் கொடுக்கப்பட்டது. இதனால் கட்சித் தலைமை மீது துரைமுருகனுக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. கட்சி தொடர்பான அனைத்து ஆலோசனைகளுக்கும் துரைமுருகனை புறக்கணித்தனர். தேர்தல் பணிகள் தொடர்பான எந்த ஆலோசனைக்கும் அவர் அழைக்கப்படாமல் ஒதுக்கப்பட்டார். தேர்தல் பணிகளை திட்டமிடுவதற்கான ஒருங்கிணைப்பு குழுவிலும் இடமில்லை. மண்டல பொறுப்பாளர் தேர்விலும், அவரது சிபாரிசு ஏற்கப்படவில்லை. இப்படி தலைமையின் தொடர் புறக்கணிப்புகளை தெரிந்து கொண்ட துரைமுருகனும் தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அவர் மீதான அதிருப்தி கோபமாக மாறியிருப்பதாகவும், அவரை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து நீக்கவும் ஆளுங்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் வெளியாக உள்ள அந்த அறிவிப்பு மட்டும், கட்சி தலைவர் பெயரில் இருக்கும் என கூறப்படுகிறது. பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு, பொதுச்செயலர் ஆகலாம். பொருளாளர் பொறுப்பில் எ.வ.வேலு நியமிக்கப்படலாம் என்கிறது அறிவாலய வட்டாரம்.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை