கடப்பாரையால் அறையின் கதவுகள் உடைத்து சோதனை
வேலூர் காட்பாடி, காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி வசிக்கும் வீடு, அவர்கள் நடத்தும் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக துரைமுருகன் வீட்டுக்கு நேற்று காலையிலேயே அதிகாரிகள் வந்தனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டப்பட்டு இருந்தது. சாவி இல்லாததால், 7 மணிநேரமாக அதிகாரிகள் காத்திருந்தனர். பின் சாவி கொண்டு வரப்பட்டதையடுத்து ரெய்டு தொடங்கியது. வீட்டுக்குள் துரைமுருகனின் அறை உள்ளிட்ட 2 அறைகளின் சாவி இல்லாததால் கடப்பாரையால் பூட்டு உடைக்கப்பட்டு அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று அதிகாலை வரை ரெய்டு தொடர்ந்தது. அதன் பின் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
ஜன 04, 2025