உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தரம் இல்லாத டாஸ்மாக் நடத்துவதாக ஒப்புதல் வாக்குமூலம் | Premalatha | DMDK | Condemns Duraimurugan

தரம் இல்லாத டாஸ்மாக் நடத்துவதாக ஒப்புதல் வாக்குமூலம் | Premalatha | DMDK | Condemns Duraimurugan

சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேசியது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று கிறுக்குத்தனமாக பேசுவது கண்டனத்திற்குறியது. ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்டசபையில் முதல்வரை வைத்துக்கொண்டே கூறுவது, மிக மிகக் கண்டனத்திற்குறியது. டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை என்றால் அந்த அளவு தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய திமுக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் தன் வாயினாலே ஒப்புக்கொண்டதாகவும் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை