இரட்டை இலை சின்னம்! 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு | ADMK | OPS | EPS | AIADMK Symbol
அதிமுக கட்சி, சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து இருந்தார். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை தொடர்பாக முடிவெடுக்க கூடாது. உள்கட்சி விவகாரம் தொடர்பாக 2017முதல் 2022 வரை தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்களை அளித்துள்ளேன். இது தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது. தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறி இருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபால், இது தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப் பெற்றது. விரைவில் முடிவெடுக்கப்படும் என பதில் அளித்தார்.