மகன்,மகள் வீடும் தப்பவில்லை: பெரியசாமியை வளைக்கும் ED | ED Raid | I Periyasamy
ஊரக வளர்ச்சி அமைச்சர் பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மற்றும் சென்னையில் பெரியசாமி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது. திண்டுக்கல் கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் பெரியசாமி வீடு, அதே பகுதியில் அசோக்நகர் வள்ளலார் நகரில் உள்ள அவரது மகள் இந்திராணி வீடு, சீலப்பாடியில் உள்ள பெரியசாமியின் மகனும், பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமார் வீடு உட்பட திண்டுக்கலில் 3 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரெய்டு நடக்கும் இடங்களில் CRPF போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீடு, சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. 8 பிரிவுகளாக பிரிந்து ரெய்டு நடத்தி வரும் அதிகாரிகள் அமைச்சர் பெரியசாமி, அவரது மனைவி சுசிலாவிடம் அதிகாலையில் இருந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இன்னும் கூடுதலாக சில இடங்களில் ரெய்டு நடத்தப்படும் எனவும் தெரியவந்துள்ளது.