கிங்க்ஸ்டன் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு | ED Raid | MP Kathir Anand | DMK
கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் களமிறங்கிய ED! 2019 லோக்சபா தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் துரை முருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் இருந்து 10 லட்சம் அவர்களது ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்புடைய இடங்களில் 11 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு அவரது மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த்தின் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.