துரை முருகன் வீட்டில் ED ரெய்டு இதற்கு தான் | ED raid | DMK MP Kathir Anand ED raid | Durai Murugan
பெட்டி பெட்டியாக சிக்கிய பணம் தேர்தலே நின்ற 2019 பிளாஷ்பேக்! ED ரெய்டின் பகீர் பின்னணி திமுக அமைச்சர் துரைமுருகன் மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்தை குறி வைத்து இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்த அதிகாரிகள் வந்தனர். அந்த வீட்டில் தான் துரைமுருகனும், அவரது மகனும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் சென்னை வீட்டில் இருந்தனர். இதனால் 7 மணி நேரம் வீட்டிலேயே காத்திருந்து பின்னர் சோதனையை துவங்கினர். அதே நேரம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் இன்ஜினீயரிங் கல்லூரியில் இன்னொரு குழுவினர் அதிரடி ரெய்டு நடத்தினர். அதே வளாகத்தில் உள்ள பிஎட் கல்லூரியிலும் சோதனை நடந்தது. இது அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமானது. அதே போல் அமைச்சருக்கும் கதிர் ஆனந்துக்கும் நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் பள்ளிக்குப்பம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சல்லடை போட ஆரம்பித்தனர்.