உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கதிர் ஆனந்த் எம்பியிடம் ED அதிகாரிகள் விசாரணை | Kathir Anand | ED | Chennai

கதிர் ஆனந்த் எம்பியிடம் ED அதிகாரிகள் விசாரணை | Kathir Anand | ED | Chennai

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் கடந்த 2019ல் காட்பாடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பறக்கும்படை சோதனை நடத்தியது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கதிர் ஆனந்த் எம்பி ஆனதில் இருந்து அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாகி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்த் வீடு, கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவரது கிஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கதிர் ஆனந்த் கல்லூரியில் இருந்து 13.07 கோடி ரூபாய், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர் ஆகினார். கைப்பற்றப்பட்ட பணம், பணப்பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ