உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிகாரிகளை மாற்றுவது பலன் அளிக்காது | Edappadi Palanisamy | ADMK | DMK govt | Illicit liquor

அதிகாரிகளை மாற்றுவது பலன் அளிக்காது | Edappadi Palanisamy | ADMK | DMK govt | Illicit liquor

கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த திராணியில்லையா? ஸ்டாலினை சாடும் இபிஎஸ் | கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த திராணியற்ற விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் குடித்த 7 பேர் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாக சீரமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அண்டை மாநில சாராய புழக்கத்தை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துவதாக பழனிசாமி கூறியுள்ளார்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ