எதிர்கட்சி வரிசையை பார்த்து முதல்வருக்கு அவ்வளவு பயமா? | Edappadi Palanisamy | ADMK | TN Assembly
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டசபை? சட்டசபையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? யார் அந்த சார்? என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன், யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக்கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயக படுகொலை. தமிழக சட்டசபை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துகளை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்.