39 எம்பிக்கள் இருந்தும் ஏமாற்றமே மிச்சம் | Budget 2024 | Edappadi Palanisamy | AIADMK | State genera
தமிழகம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் பட்ஜெட் 2024 மத்திய பொது பட்ஜெட் குறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கருத்து பதிவில் கூறியிருப்பதாவது, இன்று தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் ஒருசில அம்சங்கள் இருக்கின்றன. விவசாய துறை மேம்பாட்டுக்கு, பருவ நிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு உற்பத்தி திறனை பெருக்கும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுய சார்பு நிலையை எட்டுதல், காய்கறி உற்பத்தியை நகர்ப்புற பகுதிக்கு அருகில் பயிரிடுவதை ஊக்குவித்தல், விவசாய உற்பத்தி குழுக்களை ஊக்குவித்தல் என்று ஒருசில அம்சங்கள் உள்ளன. ஆனாலும் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமத்தை தொடர்ந்து சந்திக்கின்றனர். இதற்கு அரசு கொள்முதல் உள்ளிட்ட சந்தை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் போன்றவற்றை பெருமளவில் ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது. முதன் முதலில் வேலை வாய்ப்பை பெறுபவர்களுக்கு ஓராண்டுக்கு ஊக்கத் தொகையும், அந்த வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோருக்கு ஊக்கத் தொகையும் வழங்குவது சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இதுதவிர, திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. ஆனால், கள அளவில் இந்த உதவிகளைப் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. செயல்முறை ரீதியிலான பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.