உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல் தேர்தலில் சாதித்த அரசியல் தலைவர்கள்: சீட், ஓட்டு இரண்டிலும் விஜய் முன்னிலை

முதல் தேர்தலில் சாதித்த அரசியல் தலைவர்கள்: சீட், ஓட்டு இரண்டிலும் விஜய் முன்னிலை

ஆந்திராவில் 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ் கட்சி, 54 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வென்றது. அக்கட்சிக்கு 6.7 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. அப்போதைய அரசியல் சூழலில் அது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதே போல், 2005 பீகார் சட்டசபை தேர்தலில் புதிய கட்சியாக களம் கண்ட ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, 178 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்றது. அவரது கட்சிக்கு 12.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா மாநில சட்டசபை பொதுத் தேர்தலில், 266 இடங்களில் போட்டியிட்ட புதிய கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 70 இடங்களை கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 27.9 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 2013ல் டில்லி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 28ல் வெற்றி பெற்றது. காங்கிரசை எதிர்த்து அரசியல் களம் கண்ட கெஜ்ரிவால், காங்கிரசின் ஆதரவுடனே ஆட்சி அமைத்து முதல்வரானார். அந்த தேர்தலில் அவரது கட்சிக்கு 29.5 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. மேற்கண்ட தலைவர்களில் கெஜ்ரிவால் மட்டுமே பாேட்டியிட்ட முதல் தேர்தலில் முதல்வரானார். அரசியல் பின்புலம் இல்லாமல் தனிக்கட்சி துவங்கியவர் அவர். ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் அடுத்தடுத்த தேர்தல்களில் தான் முதல்வர் ஆகினர். இதில் ஜெகன்மோனின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேர ரெட்டி காங்கிரஸ் மூத்த தலைவராகவும், ஆந்திர முதல்வராகவும் இருந்தவர். சந்திரசேகர ராவும், புது கட்சி துவங்குவதற்கு முன் தெலுகு தேசம் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். ராம்விலாஸ் பஸ்வானோ மத்திய அமைச்சராக மட்டுமே பதவி வகித்தார். எந்த மாநிலத்திற்கும் அவர் முதல்வரானதில்லை.#Election2026 #TNelection #electionResults #ElectionResults2026 #Vijay #YSRC #JaganMohanReddy #KCR #TRS #RamvilasPaswan #LJP #TVK #TNCM #CMVijay

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !