ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு பதிவு விறு விறு | Erode | Erode By-election | Erode Election
காலை முதலே பரபரக்கிறது ஈரோடு! எம்எல்ஏ ரேஸில் முந்தப்போவது யார்? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். ஓட்டளிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 300 துணை ராணுவ வீரர்கள், 450 பட்டாலியன் போலீசார், 250 ஆயுதப்படை போலீசார், 1678 சட்டம் ஒழுங்கு போலீசார் என 2678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுபதிவு நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.