ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் | Erode by election | Candidates
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 8 வேட்பாளர்கள் வாபஸ் களத்தில் எத்தனை பேர்? ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி 17ல் முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதனால் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சுயேட்சைகளும் சேர்த்து மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மறுநாள் நடந்த பரிசீலனையில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் திங்களன்று மாலை 3 மணியுடன் முடிந்த நிலையில், 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.