சீட் பெற போட்டா போட்டி ஈரோடு கிழக்கு யாருக்கு? | Erode Election | DMK | Congress | MK stalin
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாகி உள்ளது. இத்தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடந்தபோது, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரசும் முன்வந்தது. ஆனால், திமுக தலைமை வலியுறுத்தல்படி, கடைசி நேரத்தில் இளங்கோவன் போட்டியிட்டார். நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால், மக்கள் ராஜன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோரை மட்டும் முதல்வர் சந்தித்தார். பின் பேட்டி கொடுத்த ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும். மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்பது பற்றி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.