/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எல்லா கணிப்புகளும் மாறியது: அடுத்து என்ன நடக்கும்? | Fengal | Cyclone | IMD Chennai
எல்லா கணிப்புகளும் மாறியது: அடுத்து என்ன நடக்கும்? | Fengal | Cyclone | IMD Chennai
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என வியாழனன்று சென்னை வானிலை மையம் கூறி இருந்தது. இப்போது திடீரென காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில மணி நேரத்தில் பெங்கல் புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து சனியன்று காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். பெங்கல் புயல் கரையைக் கடக்கும் போது 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.
நவ 29, 2024